×

தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க திமுகவை ஆதரிக்க வேண்டும் வேட்பாளர் இனிகோ இருதயராஜ் வாக்குசேகரிப்பு

திருச்சி, ஏப். 2: திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் இடைவிடாமல் தீவிர பிரசாரம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார். நேற்று 13வது வார்டுக்குட்பட்ட பகுதிகளான சிங்காரத்தோப்பு, என்எஸ்பி ரோடு, அல்லிமால் தெரு, பெரியகடைத்தெரு, ஒத்தைமால் தெரு, மேலபுலிவார்டுரோடு, காஜாப்பேட்டை, வயர்லெஸ் ரோடு ஆகிய பகுதிகளில் வீடு, வியாபாரிகளை சந்தித்து திமுக தேர்தல் வாக்குறுதி பிரசுரங்களை கொடுத்து வாக்கு சேகரித்தார். மேலும் அப்பகுதியில் உள்ள இஸ்லாமியர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி பிரசாரம் செய்தார். தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என்பது எட்டாகனியாகிவிட்டது. தமிழகத்தில் உள்ள காலி பணியிடங்கள் தமிழர்களுக்கு கிடைக்க திமுகவை ஆதரிக்க வேண்டும் என்றார். முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, திமுக பகுதி செயலாளர் மண்டி சேகர் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உடன் சென்றனர்.

Tags : Inigo Iruthayaraj ,DMK ,Tamil Nadu ,
× RELATED காலை உணவு திட்டத்தின் கீழ் 37,757 பள்ளி குழந்தைகள் பசியாறுகிறது